நடிகர் விஜய்யின் 66 ஆவது திரைப்படம் வாரிசு ( vaarisu ) திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார்.இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.மேலும்,தமிழ் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தும் என்றும் தில் ராஜு எதிர்பார்த்திருக்கிறார்.
இதனுடன் தெலுங்கிலும் வாரிசு ( vaarisu ) திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என தயாரிப்பாளர் தில் ராஜு எண்ணிய நிலையில் வாரிசு திரைப்படத்துடன் போட்டியாக பல திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.தமிழில் பொங்கல் அன்று வாரிசு திரைப்படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.இதேபோன்று தெலுங்கிலும் வாரிசு திரைப்படம் வெளியாகும் அதே பொங்கல் தினத்தன்று பிரபாஸ் நடித்த ஆதிபுரூஸ் மேலும் பாலகிருஷ்ணா நடித்த என்.பி.கே 107 மம்முட்டி நடிக்கும் அகில்ஸ்ஏஜென்ட் படமும் வெளியாக உள்ளது.
தெலுங்கில் இந்த மூன்று படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த திரைப்படங்களால் தெலுங்கு திரையுலகில் வாரிசின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்றும் மேலும் தமிழில் துணிவு மூலம் வாரிசு திரைப்படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்றும் தயாரிப்பாளர்கள் தில் ராஜு கவலைகள் இருப்பதாக தற்போது சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.