சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று 1,600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Vaccination Camps In Chennai
தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்வகையில் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்திவருகிறது.இதன் பயனாக தமிழகத்தில் இதுவரை சுமார் 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ள மாநகராட்சி நிர்வாகம் சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்களை அதிக அளவில் நடத்தி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,600 முகாம்களில் 1,91,350 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டன. இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்றும் சென்னையில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட திட்டமிட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 15 ஆம் தேதி நிலவரப்படி சென்னை மாநகராட்சி சார்பில் மொத்தம் 46,32,776 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிபிடத்தக்கது.