ITamilTv

”திருக்குறளைத்தான் உதயநிதி பேசியிருக்கிறார்” – சப்போர்ட் செய்த வைரமுத்து!!

Spread the love

திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன் என்று கவிஞர் வைரமுத்து(Vairamuthu) கேள்வி யெழுப்பியுள்ளார்.

சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அதாவது, “டெங்கு, மலேரியாவை நாம் எதிர்க்க முடியாது. அதை ஒழிக்கத்தான் முடியும். அதேபோல, சனாதனத்தையும் நாம் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று உதயநிதி பேசினார்.

இந்த சூழலில், உதயநிதி இந்து மக்களை படுகொலை செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார் என வட மாநிலங்களில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவதால்,நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன் என்று கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமான கருத்துருவங்கள் பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்பது சனாதனக் கருத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு திருக்குறளைத்தான் உதயநிதி பேசியிருக்கிறார் திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன்? அரசியல் என்று குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version