முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் – சாதனை படைத்த வைஷாலி!

Spread the love

தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி. இவர் கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அதே போல் இந்தியளவில் 3வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்தியாவின் கோனேரு ஹம்பி,  ஹரிகா ஆகியோரைத் தொடர்ந்து இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை வைஷாலி பெற்றுள்ளார்.

இதுவரை 41 பெண் செஸ் வீராங்கனைகள் மட்டுமே கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளனர் .


Spread the love
Related Posts