ITamilTv

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டு சானம் கலப்பு – வானதி சீனிவாசன் கண்டனம்

Spread the love

விருதுநகர் மூப்பன்பட்டி அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டு சாணம் கலந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .

விருதுநகர் மூப்பன்பட்டியில் உள்ள அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மாட்டு சாணத்தை கலந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ திட்டத்திற்கு வந்த போலீசார் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கு முன் வேங்கை வயலில் குடிநீரில் மர்மநபர்கள் மலம் கலந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விருதுநகர் அருகே அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் . அந்தவகையில் தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் கூறிருப்பதாவது :

வன்மையாக கண்டிக்கிறேன்..

திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு குடிநீரில் மலம் கலப்பது சாணம் கலப்பது என்று சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுவரை வேங்கை வயல் சம்பவம் தொடர்பான விசாரணையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. இந்த அசம்பாவிதம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால் தமிழக முதல்வருக்கு இதை பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை ஹிந்து மதம் குறித்து பொய் பிரச்சாரம் செய்ய மட்டுமே நேரமிருக்கிறது.

இது போன்ற கொடூரங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முதல்வர் மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். இச்சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version