குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பாஜக பிரமுகர்கள் மோகன்ராஜ்,செந்தில் குமார்,புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 பேர் போதை ஆசாமியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், மனவருத்தமும் அடைந்ததாக தமிழ்நாடு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
பல்லடத்தில் தன் வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டதால் பாஜக பிரமுகர்கள் செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 4 பேர் போதை ஆசாமியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அறிந்து அதிர்ச்சியும், மனவருத்தமும் அடைந்தேன்! உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக இது போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறியும், எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது!

காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டறிந்து, தக்க தண்டனை வழங்கப்படவேண்டும்! உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.