தனியார் பட்டாசு கடைகளுக்கு உடனடியாக உரிமம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் பெரம்பூரில் அவரது அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் ;
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் இதுவரை தனியார் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கப்படாமல் உள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு 20 நாட்கள் முன்பாகவே தீயணைப்பு அதிகாரிகள் பட்டாசு கடைகளை ஆய்வு செய்து கடை உரிமையாளர்கள் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்து தீயணைப்பு உரிமத்தை வழங்கிடுவார்கள்.
மேலும் பட்டாசு கடை உரிமையாளர்கள் அதனை வைத்து காவல்துறை அதிகாரிகளை அணுகி உரிமம் வாங்குவார்கள் தீபாவளி வியாபாரம் என்பது தற்காலிக வியாபாரம் எனவே தீபாவளி பண்டிகைக்கு 15 நாள் முன்பாகவே உரிமம் வழங்கினால் தான் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியும் எனவே நவம்பர் ஒன்றாம் தேதி இன்று முதல் தீவுத்திடலில் பட்டாசு வியாபாரம் செய்ய அரசு அனுமதி கொடுத்ததைப் போல அனைத்து வணிகர்களுக்கும் பட்டாசு கடைகளை அமைக்க உரிமம் வழங்கிட வேண்டும்.
அப்போதுதான் சிறு வியாபாரிகள் உட்பட அனைத்து வியாபாரிகளும் பண்டிகை காலத்தில் செய்யும் இந்த பட்டாசு வியாபாரத்தை முறையாக செய்து லாபம் பெற முடியும் எனவே அரசு உடனடியாக தனியார் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.