பிக் பாஸ் வீட்டிற்குள் பிளானுடன் நுழைந்துள்ள வனிதா மகள் ஜோவிகா – ஆரம்பிக்கலாமா..?

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கி உள்ளது.

இதில், விஜய் வர்மா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், யுகேந்திரன், நிக்சன், பிரதீப் ஆண்டனி, மணி சந்திரா, விஷ்ணு விஜய், பாவா செல்லத் துரை, ஐஷு, விசித்ரா, ரவீனா, பூர்ணிமா ரவி, ஜோவிகா, வினுஷா தேவி, அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், அனன்யா ராவ் என மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இவர்களுள், ஏற்கனவே பிக்பாஸில் கலந்துகொண்ட வனிதாவின் மகளும் ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

அப்போது ஜோவிகா பற்றிய அறிமுக வீடியோவில், “நான் ரொம்பவே ஜாலியான ஆள். எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளமாட்டேன். எப்போதும் கோபமாக இருக்கும் என்னுடைய அம்மா வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறார். இந்த நிகழ்ச்சி என்னுடைய அம்மாவிடம் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பிக் பாஸ் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. எனக்கு படிப்பு வரவில்லை.. மேலும், எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகம் இருக்கிறது. ஏனென்றால், என் குடும்பத்தில் அனைவருமே திரைத்துறையில் இருப்பதை பார்த்து நான் வளர்ந்துள்ளேன். என் சினிமா கனவுக்கு பிக் பாஸ் பெரிதும் கைகொடுக்கும் என நம்புகிறேன். அதுமட்டுமல்ல, தனி ஒருவராக என் அம்மா படும் கஷ்டங்களுக்கு நானும் உதவ நினைக்கிறன்”.. என்று கூறியுள்ளார்.

அதையடுத்து, கமல் ஹாசன் ஜோவிகாவிடம், நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் உங்கள் அம்மா ஏதாவது டிப்ஸ் கொடுத்தார்களா என கேட்டார். அதற்கு பெரிதாக ஒன்றும் டிப்ஸ் கொடுக்கவில்லை சார் என்று பதிலளித்தார் ஜோவிகா.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியிருக்கும் ஜோவிகா, தன் அம்மா வனிதாவை போன்று இருப்பாரா? அல்லது அதற்கு மாறாக இருக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்…

மேலும், அந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவுக்கு வந்திருந்த வனிதாவிடம் நீங்கள் எதுவும் டிப்ஸ் கொடுத்தீர்களா என்று கேட்டார் கமல் ஹாசன். அதற்கு பதிலளித்த வனிதா,

“சார் நான் டிப்ஸ் கொடுத்தா அவள் ஜெயிக்கப்போறா. நானே நிறைய தடவை வீட்டுக்குள் போவதும் வருவதுமாக இருந்தேன். அவளிடம் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன். யாருக்காகவும் உன்னை நீ மாற்றிக்கொள்ளாதே. உன் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் கேள் என சொல்லியிருக்கிறேன்.

அவள் ரொம்பவே தைரியமான ஆள். அன்புக்காக கடுமையாக போராடுவாள்.வீட்டை மிகவும் அழகாக நிர்வகிப்பாள். அவள் தான் எனக்கு அம்மா.. நான் என்னுடைய அம்மாவைத்தான் உள்ளே அனுப்புகிறேன். சினிமா எல்லாம் வேண்டாம் என்று பலர் சொன்னாலும்.. அதையெல்லாம் மீறிதான் இங்கு வந்திருக்கிறாள்.

பிக்பாஸ், சினிமா எல்லாத்தையும் தாண்டி உங்கள் அருகில் நிற்கும் பாக்கியம் அவளுக்கு கிடைத்துள்ளது. அவளுடைய ஃபர்ஸ்ட் ஃப்ரேம் இது. அதில் உங்களுடன் நிற்கிறாள். உங்களுக்கும், எனக்கும் கூட இந்த வயதில் கிடைக்காத மேடை இவளுக்கு கிடைத்துள்ளது. எத்தனை ஹீரோயின்களுக்கு இது கிடைக்கும்” என்று கூறினார்.

Total
0
Shares
Related Posts