தாய்லாந்தில் நேற்று நடிகை வரலட்சுமியின் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி – நிக்கோலஸ் சச்தேவ் ஆகியோரின் திருமணம் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ தாய்லாந்தில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
புதிதாக இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள இந்த ஜோடிக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்த ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.