தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களான நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில் தற்போது குடும்பத்தின் சம்மதத்துடன் கோலாகலமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு தான் நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதி ஜோடி. கடந்த சில வருடங்களாக யாருக்கும் தெரியாமல் சத்தமின்றி டேட்டிங் செய்து வந்த இவர்கள் திடீரென கடந்த வாரம், தங்களின் திருமண நிச்சயதார்த்தம் குறித்த அதிகார பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டனர் .
திரையுலகில் மீண்டும் ஒரு காதல் ஜோடியா என்று அனைவரும் கிசுகிசுத்த நிலையில், இவர்களின் திருமணம் நிச்சயதார்த்தம் பெற்றோர்கள் சம்மதத்துடன் வெள்ளிக்கிழமை (நேற்று) பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி செம வைரலாகி வருகிறது.






