மாணவனாக மாறிய தனுஷ்… – `வாத்தி’ ஷூட் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் `செம குஷி’

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’வாத்தி’ என்றும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்க இருப்பதாகவும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த புகைப்படத்தில் தனுஷ் மிகவும் இளமையாகவும், சட்டைக்கையை மடித்துவிட்டு ஒரு வித்தியாசமான வாத்தியாக தோற்றமளிக்கின்றார். இந்த ஸ்டில்லை பார்க்கும்போதே இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஜோடியாக சம்யுக்தா நடிக்கும் இந்த படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு, நவீன் நூலி படத்தொகுப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


Spread the love
Related Posts