அதிநவீன தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் தளபதி 68 படத்திற்காக அமெரிக்கா நாட்டில் உள்ள கிரியேட்டிவ் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ள படக்குழு அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்துவருகிறது இந்நிலையில் அங்கு நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது .
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற மாஸ் பட்ஜெட் படத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இதுற்கும் தனது 68 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத (தளபதி 68) இப்படத்தை படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளது . நெடுநீண்ட இடைவெளிக்கு பிறகு BGM கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பணிகளுக்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பறந்து சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற அங்கு பிரபல கிரியேட்டிவ் ஸ்டுடியோ ஒன்றில் ‘தளபதி 68’ பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிரியேட்டிவ் டெக்னாலஜி ஸ்டுடியோவிற்கு நடிகர் விஜய் சென்றுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

தளபதி 68 படத்திற்கான 3D ஸ்கேனிங் மற்றும் vfx பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் USC Institute for creative Technologies நிறுவனத்தில் நடைபெறுகிறது. இந்நிறுவனம் இதற்கு முன் Avatar, Blade Runner 2049, Maleficent, Fast and Furious, The Jungle Book, Ready Player One போன்ற படங்களின் vfxல் பணியாற்றியுள்ளது. இரண்டு முறை ஆஸ்கர் விருதும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்கா வந்துள்ள தளபதி விஜய்யை வரவேற்கும் விதமாகவும் படம் குறித்த முக்கிய அப்டேட்டை மறைமுகமாக சொல்லுவகையிலும் இயக்குநர் வெங்கட் பிரபு டக்கர் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
இதுநாள் வரை ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பாக இருந்து வந்த லியோ திரைப்படம் மீதான தாகம் இன்னும் குறையாத நிலையில் தற்போது தளபதி 68 குறித்த வெங்கட் பிரபுவின் மாஸான அறிவிப்பு தளபதியின் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .