அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை – 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

very-heavy-rain-warning-for-these-15-districts
very heavy rain warning for these 15 districts

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வாங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 2ஆம் தேதி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை தஞ்சாவூர், மற்றும் திருச்சி, பெரம்பலூர்,அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும் என வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

very heavy rain warning for these 15 districts

மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், புதுவை பகுதிகளில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அக்டோபர் 3 ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதிகளிலும் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Total
0
Shares
Related Posts