சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பின்போது ( shootingspot photos ) எடுக்கப்பட்ட ரஜினிகாந்த மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது .
ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வேட்டையன்.
பிரம்மாண்ட பொருட் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு குறித்த டீசர் வெளியாகி தலைவரின் ரசிகர்களுக்கு சிறப்பான தரமான விருந்து காத்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியது.
Also Read : கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது..!!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல முக்கிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது .
ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு படக்குழுவை ரசிகர்கள் அன்புத் தொல்லை செய்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ( shootingspot photos ) ரஜினிகாந்த மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது .
இதோ அந்த டக்கர் போட்டோஸ்..

