சூப்பர் ஸ்டார் நடிப்பில் அட்டகாசமாக உருவாகி உள்ள ‘வேட்டையன்’ படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ஜெய் பீம் என்ற ஹிட் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படமே வேட்டையன் . பிரம்மாண்ட பொருட் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் சத்தமின்றி நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது.
Also Read : திமுகவில் கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டுமே தலைமை பொறுப்பு – ஹெச்.ராஜா விமர்சனம்..!!
ராக்ஸ்டார் அனிருத் இசையில் தரமாக தயாராகி உள்ள இப்படம் விரைவில் திரையரங்குளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்தின் ட்ரெய்லர் வரும் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.