நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பு நிர்வாணம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வந்த விடாமுயற்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்,ஆரவ்,அர்ஜுன் , திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது சில பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் என லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குழுவின் இந்த அறிவிப்பால் பொங்கலுக்கு தல தரிசனம் கிடைக்கும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர்.