மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் 200வது பிறந்தநாள் விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக சீர்திருத்தவாதிகளில் முக்கியமானவராக விளங்கிய பூலே அவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு முதலில் வந்த பிரதமர் மோடியை ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பின்னர், பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் சில நேரம் இயல்பாக கலந்துரையாடிக் கொண்டனர்.
அரசியல் ரீதியாக ஒருவருக்கு ஒருவர் எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வரும் சூழலில், இவ்வாறு இரு தலைவர்களும் சாதாரணமாக உரையாடிய காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

