Site icon itamiltv.com

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முக்கிய அறிவிப்பு-அரசியல் களத்தில் பரபரப்பு!

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பது தொடர்பாக அக்கட்சியின் சார்பில் ஆதரவு கேட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலை குழுக் கூட்டம் இன்று இணையவழியில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் தமிழகம் தழுவிய அளவில் கலந்து கொண்ட உயர்நிலை குழு கூட்டத்தின் உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஆகையால்,அக் கூட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துகள் அடிப்படையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நாளை எமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

இதற்கிடையே ஊடகங்களில் இரு வேறு மாறுபட்ட கருத்துக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களிடையே ஒரு குழப்பத்தை விளைவிக்கும்.
அத்துடன் எமது கட்சியின் மீதான நன்மதிப்பையும் சீர்குலைக்கும் போக்காகும்.

ஆகவே நாளை காலை எமது தலைவர் அவர்கள் எமது கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Exit mobile version