ஏகே 62 பட வாய்ப்பை விக்னேஷ் சிவன் இழக்க முக்கியமான காரணம் நயன்தாரா தான் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் எச் வினோ இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. துணிவு திரைப்படத்திற்கு முன்னதாக ஏகே 62 படம் பற்றிய தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்த இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார் என்றும் தற்காலிகமாக அந்த படத்திற்கு AK 62 என்ற தலைப்பிடப்பட்டது போன்ற தகவல்கள் வெளியிட்டனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது இருப்பதாகவும், நடிகர் அரவிந்த்சாமி இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் செய்திகள் வெளிவந்தனர்.
இப்படி அடுத்தடுத்த தகவல் வெளியான நிலையில் AK 62 படம் குறித்து கடந்த மாதம் நிறுத்தி வைக்கப்பட்டு பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏ கே 62 படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக மகிழ்ந்திரு மேனி ஒப்பந்தமானார்.
மேலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கொண்டு வந்த கதை லைக்கா நிறுவனத்திற்கும் அஜித்திற்குப் பிடிக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்து பொய் என்று தெரிவிக்கும் வகையில் தற்பொழுது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் ஏகே 62 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார். ஆனால் லைக்கா நிறுவனமோ திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளை பரிந்துரை செய்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த விக்னேஷ் சிவன், பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதிக் கட்டத்தை எட்டும் நிலையில் அவர்களையும் வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மீண்டும் மீண்டும் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் முயற்சி செய்தித்தாகவும், இதனால் கோபமடைந்த லைக்கா நிறுவனம் மற்றும் அஜித் குமார் ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவனை நீக்கியதாகக் கூறப்படுகிறது.