ITamilTv

Varisu : நவம்பர் மாதமே கொண்டாட்டத்தில் விஜய்-அஜித் ரசிகர்கள்

Spread the love

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்த இரு படங்களின் சிங்கிள் ட்ராக் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது நவம்பர் முதல் வாரத்தில் சிங்கிள் டிராக்கை வெளியிட வாரிசு பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.வாரிசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

vijay

அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.துணிவு திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலை பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஏற்கனவே,அனிருத் அஜித்திற்காக பாடிய ‘ஆலுமா டோலுமா ‘பாடல் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்துக்காக அனிருத் பாடும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கான முதல் சிங்கிள் பாடலும் நவம்பர் முதல் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே,அஜித்-விஜய் ரசிகர்களுக்கு நவம்பர் முதல் வாரமெயே கொண்டாட்டமான வாரமாக அமையும்  என்று காத்திருக்கின்றனர்.


Spread the love
Exit mobile version