ITamilTv

‘ரோமியோ’ – விஜய் ஆண்டனியின் படம் மே 10-ல் ஓடிடியில் ரிலீஸ்!

romeo movie

Spread the love

romeo movie : நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் வருகிற மே 10ஆம்தேதி வெள்ளிக்கிழமை அன்று ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் வெளிவந்த ரோமியோ படத்தில் மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க : காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ரோடாவின் சர்ச்சை கருத்து- பா.ஜ.க. கண்டம்!

விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனக்களை பெற்றது.

இந்த படத்தை நடிகர் விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். இந்த படம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ரப் னே பனாதி ஜோடி’ ஹிந்தி படத்தின் சாயலில் இந்த படம் உள்ளதாக விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்தது.

romeo movie

இதனிடையே “ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க” என்று விஜய் ஆண்டனி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்த சூழலில் தற்போது இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆஹா ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது romeo movie.

இதையும் படிங்க : சவுக்கு சங்கருக்கு மே 22 வரை நீதிமன்றக் காவல்


Spread the love
Exit mobile version