ITamilTv

அஜித்தை பின்பற்றும் தளபதி விஜய்யின் அப்பா…

Spread the love

நடிகர் விஜய்யின் தந்தையான SAC தற்போது பைக்கில் தனி நபராக சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறார்.இதுபோலவே நடிகர் அஜித்தும் உலகை சுற்றிப் பார்ப்பதற்காக பைக்கில் தனிநபராக பல இடங்களுக்கு சென்று வருகிறார்.

சமீபத்தில் நடிகர் அஜீத் துணிவு பட புரொமோஷனில் கலந்துகொள்ள இருக்கிறார் என வதந்தி பரவ உடனே ஒரு படம் தான் பேச வேண்டும் என கூறியதை அவரது மேனேஜர் பதிவு செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதேபோல தற்போது நடிகர் விஜய்யின் தந்தையும் தனிநபராக பைக்கில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பல  கமெண்ட்களை செய்து வருகின்றனர்.அஜித்தைப் போல இவரும் தற்போது பைக்கில் உலகம் சுற்றுகிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும்,SACஅவர்கள் பைக்குடன் இளைஞன் போல இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது விஜய்யின் தந்தை SAC இமாலயாவுக்கு சென்றுள்ளார். அவர் பைக்கில் சூப்பரான லுக்கில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. இதைப்பார்த்ததும் ரசிகர்கள் அஜித்தை போல இவரும் பைக்கில் உலகம் சுற்ற இருக்கிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version