Site icon ITamilTv

விஜய் கடவுள் மாதிரி.. கேரளா சிறுவனின் பெற்றோர் நெகிழ்ச்சி பேட்டி!

Goat update

Spread the love

Goat update : மத்தவங்க உதவி இல்லாம Wheel Chair-ல இருந்து எழுந்திரிக்க முடியாத சிறுவன், ஆக்டர் விஜய் கிட்ட வந்ததுமே அவனா எழுந்து நின்னு அவர கட்டி பிடிச்சதா சிறுவனோட அம்மா ஆச்சர்யத்தோட சொல்லிருக்காங்க…

இன்னொரு பக்கம் விஜய் அண்ணாவ தவிர வேற யாராலயும் இந்த அளவுக்கு குழந்தைங்கல சந்தோஷ படுத்த முடியாது என்று ட்விட்டர் ல தெறிக்க விட்டுட்டு இருக்காங்க விஜய் ரசிகர்கள்.

லியோ பட வெற்றிக்குப் பின்னர், வெங்கட்பிரபு இயக்கத்தில் GOAT அதாவது “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” அப்டீன்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : தற்கொலைக்கு முயன்றதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஈரோடு எம்.பி. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

முதுமை தோற்றம், இளமைத் தோற்றம் என இருவேறு கெட்டப்களில் இந்த படத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் ஒரு பாட்டு பாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்துச்சு. இதற்காக 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா சென்றார்.

ஏற்கனவே கேரளாவில் நடிகர் விஜய்க்கென ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இவர்களுக்கு நடிகர் விஜய் சூட்டிங்குக்காக கேரளா வருவது தெரிந்ததும், அவர்கள் விமானநிலையத்திலேயே திரண்டு வந்து வரவேற்றனர்.

ரசிகர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிபடியே அவர்களைப் பார்த்து கையசைத்தபடியே கடந்து சென்றார் விஜய்.

சூட்டிங் நடந்த இடத்திலும் ரசிகர்கள் விஜயைப் பார்க்க தினமும் திரண்டு வரத் தொடங்கினர். அவர்களை விஜய் சந்தித்தும் வந்தார். ஒருகட்டத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமான நிலையில, கேரவன் மேல ஏறி நின்னு பேசின விஜய்..

தமிழ்நாடும் சரி, கேரளாவும் சரி எனக்கு இரு கண்கள் மாதிரி. உங்க வீட்டுப் பிள்ளையாக பார்த்தீங்க பாருங்க, அது உண்மையிலேயே எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருங்குதுங்க.

அப்படியே உங்க மனசில் வாழ்ந்திடணும்னு ஆசையா இருக்கு என்றவர், தனது வழக்கமான செல்பியையும் எடுத்து அவர்களைக் குஷிப்படுத்தினார்.

குழந்தையக் கொஞ்சியது, மாற்றுத்திறனாளி குழந்தைகளை சந்தித்தது என்று விஜய்காட்டிய மாஸ்கள் எல்லாமே ரீசன்ட் டேஸ் ஆ சோசியல் மீடியாக்கள்லயும் ரணகளமாச்சு.

இந்த நிலையில் தான், மத்தவங்களோட உதவி இல்லாம வீல் சேர்ல இருந்து எழ முடியாத சிறுவன் ஒருவன் விஜயைப் பார்த்ததுமே தானாவே எழுந்து நின்று அவர கட்டிப்பிடிச்சுகிட்ட வீடியோ பரபரப்பாகிட்டு இருக்கு.

கேரள செய்தித் தாள்களிலும் இதுகுறித்து செய்தி வெளியான நிலையில் அந்த சிறுவனின் பெற்றோரும் இந்த சம்பவம் நடந்தது உண்மை தான் அப்டீன்னு சொல்லிருக்காங்க.

இதையும் படிங்க : நீட்-க்கு பயந்து தற்கொலை முயற்சி!

விஜயைப் பார்த்ததும் தங்கள் மகன் வீல் சேரில் இருந்து எழுந்ததாகவும், இதுனால விஜய் தங்களுடைய மகனுக்கு எதோ மேஜிக் பண்ணிட்டாரு அப்டீனும் வியந்து பேசிருக்காங்க..

SO, அந்த வீடியோக்கள் எல்லாம் தான் இப்போ சோசியல் மீடியாக்கள்ல வைரலாகிட்டு வருது.

ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி தமிழக அரசியலில் கால்பதித்துள்ள விஜய்யின் வீடியோக்கள் இப்டி சோசியல் மீடியாக்கள்ல வைரலாகிட்டு வரதால, தமிழக அரசியல் கட்சிகளின் ஐ.டி விங்குகள் அரண்டு போய் கிடக்கிறதாம் Goat update.

GOAT update : “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்”


Spread the love
Exit mobile version