சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை (Vijay meet) நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் உச்சமான நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்துத்து வருகிறார். அது மட்டும் இன்றி மக்கள் நடத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
இதனால் விஜய் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றால் போல் சமீபத்தில் நடைபெற்ற லியோ நிகழ்ச்சியில் மேடையில் விஜய் இருந்தார்.
அப்போது தளபதி என்றால் என்ன அர்த்தம். நீங்கள் (ரசிகர்கள்) மன்னர்கள். நான் உங்கள் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன் என தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை சூசகமாக கூறினார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டு வரும் சூழலில் கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், விஜய் இன்று ஆலோசனை (Vijay meet) நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Headlines : இன்றைய தலைப்புச் செய்திகள்
இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டத்திலிருந்தும் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது, நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
https://x.com/ITamilTVNews/status/1750385175975141876?s=20
கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.