இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ள நடிகர் விஜய் அதன் மூலமும் சில சாதனைகளை செய்துள்ளார். அது என்னென்ன சாதனைகள் என பார்ப்போமா?
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். சமூக வலைதளங்களை அவர் பெரிதாக பயன்படுத்துவதில்லை என்றாலும், அவ்வப்போது டுவிட்டரில் மட்டும் ஆக்டிவாக இருந்து வந்தார். அதன் மூலம், டுவிட்டரில் மில்லியன் கணக்கிலான பாலோவர்களை கொண்டுள்ள விஜய், நேற்று திடீரென இன்ஸ்டாகிராமிலும் இணைந்து புதிதாக கணக்கு ஒன்றை தொடங்கினார்.
யாரும் எதிர்பார்த்திடாத நடிகர் விஜய்யின் இந்த இன்ஸ்டாகிராம் எண்ட்ரி தான் நேற்றும், ஏன் இன்றும் கூட பேசுபொருளாக இருந்து வருகிறது. அவர் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதும் போட்ட முதல் பதிவு, லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீரில் எடுத்த புகைப்படததை தான். அந்த புகைப்படத்தை பதிவிட்டு, ஹலோ நண்பாஸ் & நண்பீஸ் என்கிற பதிவு தான் அவருடைய முதல் பதிவாக இருந்தது. அதையடுத்து சில மணி நேரங்களில் காஷ்மீரில் எடுத்த ஒரு போட்டோவை ஸ்டோரியாக பதிவேற்றியிருந்தார். இந்த பதிவுகளுக்கு மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் எண்ட்ரி மூலம் 2 சாதனைகளை படைத்துள்ளார் விஜய். அதன்படி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதும் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் உலகளவில் சாதனையும் படைத்துள்ளார்.
அதன்படி இன்ஸ்டாகிராமில் அறிமுகமானதும் உலகளவில் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவர் 99 நிமிடத்தில் 1 மில்லியன் பாலோவர்களை எட்டினார். இந்த பட்டியலில் 43 நிமிடங்களில் 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய BTS V என்கிற தென்கொரிய பாடகர் முதலிடத்திலும் , 59 நிமிடங்களில் 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 2-வது இடத்திலும் உள்ளனர்.
அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற கோலிவுட் நடிகரின் புகைப்படம் என்கிற சாதனையையும் நடிகர் விஜய் படைத்துள்ளார். இதற்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் பண்டிகையின் போது தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டபோது அதற்கு 2.6 மில்லியன் லைக்குகள் கிடைத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை நடிகர் விஜய் 4 மணிநேரம் 30 நிமிடத்தில் முறியடித்து முதலிடம் பிடித்தார்.
தற்போது வரை அந்த போட்டோவுக்கு கிட்டத்தட்ட 4.3 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி விஜய்யை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையும் தற்போது வரை 42 லட்சத்தை தாண்டி உள்ளது.