தவெக சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுக்கு வைர மோதிரம், 5000 மதிப்பிலான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை தவெக தலைவர் விஜய் விஜய் வழங்கி வருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விஜய் விருது வழங்கி பாராட்டி வருகிறார்.
கல்வி விருது என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதை விஜய் தானே நேரடியாக மாணவ, மாணவிகளுக்கு வழங்குகிறார். இந்த விருதுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
Also Read : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம் தொடக்கம்..!!
இந்த விருது நிகழ்ச்சி இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட நிகழ்வு இன்றும் இரண்டாம் கட்ட நிகழ்வு ஜுலை 3ஆம் தேதியும் நடைபெறுகிறது .
இந்நிலையில் சென்னை திருவான்மியூர் ராமச்சந்திர கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் முதல்கட்ட விருது வழங்கும் விழாவிற்கு விஜய் வருகை தந்த விஜய்க்கு மாணவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் .
இதையடுத்து தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வைர மோதிரம், 5000 மதிப்பிலான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை தவெக தலைவர் விஜய் விஜய் வழங்கி வருகிறார்.
இதுமட்டுமின்றி விழாவில் கலந்துகொண்டுள்ள மாணர்வகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு மேடையில் சில அட்வைஸ்களையும் விஜய் வழங்கி வருகிறார்.