Site icon ITamilTv

Christmas Collection மேரி கிறிஸ்துமஸ் படத்தின் வசூல்

Christmas Collection

Christmas Collection

Spread the love

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான மேரி கிறிஸ்துமஸ் (Christmas Collection) திரைப்படம் தற்போது தாறுமாறான வசூலை ஈட்டி வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கத்ரினா கைப் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான படம் தான் ‘மெரி கிறிஸ்துமஸ் .

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இப்படத்தில் சேதுபதி மற்றும் கத்ரினாவுடன் ராதிகா ஆப்தே, காயத்ரி சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரையரங்குகளில் கடந்த 12 ஆம் தேதி கோலாகலமாக வெளியானது .

இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்த நிலையில் படமும் பட்டய கிளப்பி வருகிறது .

நடிகர் விஜய் சேதுபதி கையில் எடுக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் ஆகி வரும் நிலையில் மேரி கிறிஸ்துமஸ் படமும் அவரது சூப்பர் ஹிட் லிஸ்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அதேபோல் இந்த படத்துடன் வெளியான மேலும் சில படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், திரையரங்கில் பட்டையை கிளப்பி வரும் மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 12ம் தேதி வெளியான இந்தப்படம், அன்றைய தினம் மட்டும் 2.45 கோடி வசூல் செய்தது.

(Christmas Collection) அடுத்த நாளில் 3.45 கோடியும், மூன்றாவது நாளில் 3.83 கோடியும் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

Also Read : https://itamiltv.com/anbumanis-letter-for-one-country-one-election/

கடந்த திங்கள் அன்று 1.65 கோடி வசூல் செய்த மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 1.3 கோடியும் வசூல் செய்திருக்கிறதாம். ஆக மொத்தமாக, ஐந்து நாட்களில் மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம் 12.68 கோடி வசூல் செய்திருக்கிறதாம்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் சக்கை போடு போட்டு வரும் நிலையில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


Spread the love
Exit mobile version