தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள மே 4ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது.
கடந்த சில வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் ஓய்வுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயும் தேர்தல் பணிகள் முடிந்ததால் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
பொதுவாக படப்பிடிப்புகள் முடிந்த பிறகு வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது அவரது வழக்கமாக இருந்துள்ளது.
மேலும், அதற்கான பயண ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வந்தால், அவர் தனது பயணத்தை ரத்து செய்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

