விஜய் டிவி புகழ் வீட்டில் விசேஷம்.. என்னனு தெரியுமா?

குக் வித் கோமாளி நடிகர் புகழ் மனைவி பென்ஸி நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், அவர்கள் எடுத்துக் கொண்ட போட்டோஷூட்டை புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலமான புகழ் தமிழ் சினிமாவிலும் காமெடியனாக களமிறங்கியுள்ளார். வலிமை, சபாபதி, டிஎஸ்பி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் தனது காதலி பென்ஸியை திருமணம் செய்துக் கொண்ட புகழ் இவர்களது திருமண நாளை முன்னிட்டு தனது மனைவி கர்ப்பமாக உள்ள செய்தியை அறிவித்துள்ளார்.

மேலும், புகைப்படத்துடன் சேர்த்து பதிவு ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், “என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை.

என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை.. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்… இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பென்ஸி புகழ்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், விஜய் டிவி புகழின் மனைவி கர்ப்பமாக உள்ளதை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும் புகழுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts