மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசின் ( captain ) பத்மபூஷன் விருது மே 9ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசின் பத்ம பூஷண் விருது கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
திரைவாழ்க்கையிலும் நிஜவாழ்க்கையில் விஜயகாந்த் ஆற்றிய நற்செயல்களுக்கு செய்யப்படும் மரியாதையே இந்த பத்ம பூஷண் விருது என திரை பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் மனதார பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து கேப்டன் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் :
விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி. அவர் இருந்த போதே கொடுத்திருந்தால் சந்தோசமாக விருதை பெற்றிருப்போம்.
காலம் கடந்து காலன் எடுத்து சென்ற பிறகு அளிக்கப்பட்ட இந்த விருது கௌரவமான விருது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார் .
Also Read : நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை..!!
இந்நிலையில் மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மத்திய அரசின் பத்மபூஷன் விருது மே 9ஆம் தேதி வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தலை திறந்துவைத்த பின் ( captain ) அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.