Site icon itamiltv.com

விஜய்யின் சொத்து பட்டியல் வெளியானது ..- தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலின் ‘நட்சத்திர வேட்பாளராக’ அறியப்படும் தவெக தலைவர் விஜய், இன்று தனது முதல் வேட்புமனுவை பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்தார்.

தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196) என்று தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அசையா சொத்து – 115 கோடி ரூபாய் (115,13,63,000) ஆகும். அதேபோல விஜய் மனைவி சங்கீதா பெயரில் 15,51,79,421 (15 கோடி) அசையும் சொத்தும் 2.5 கோடி ரூபாய் (2,50,00,000 )அசையா சொத்தும் உள்ளன.

இதன்மூலம் மொத்தம் ரூ.537 கோடி ரூபாய் பணம் விஜயிடம் உள்ளதாக, தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் சொத்து பட்டியல்


அசையும் சொத்துக்கள்: ₹404 கோடி
அசையா சொத்துக்கள்: ₹220.15 கோடி.
பூர்வீகச் சொத்து மதிப்பு: ₹21.83 கோடி.
சுயமாக வாங்கிய அசையா சொத்து: ₹92 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்கள்.
தங்க நகைகள்: 110 சவரன் தங்கம் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
883 கிராம் தங்கம் இருப்பு
விஜய் தனது வசம் ரூ.1.20 கோடி மதிப்பில் 883 கிராம் தங்கம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளார்.
மனைவி வசம் ரூ.4.07 கோடியில் 3,132 கிராம் தங்கம்; ரூ.1 கோடி மதிப்பில் 134.91 காரட் வைரம் இருப்பதாகவும் தகவல்.
விஜய்யின் மனைவி பெயரில் ரூ.15 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்கள்
ரூ.115 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் விஜய் தகவல்
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட விஜய் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தகவல்
2 பிஎம்டபிள்யு, லெக்சஸ், டோயட்டோ வெல்பயர் உள்ளிட்ட கார்கள் சொந்தமாக இருப்பதாக விஜய் தகவல்
தனது பெயரில் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம் இருப்பதாக விஜய் தகவல்
விஜய் மனைவி சங்கீதா பெயரில் 3 கிலோ தங்க நகைகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தகவல்
135 காரட் வைர நகைகள் சங்கீதா பெயரில் இருப்பதாக தகவல்
விஜய்யின் பெயரில் கடன் ஏதும் இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் தகவல்
2024-25ல் மட்டும் தவெக தலைவர் விஜய்க்கு ரூ.184 கோடி வருமானம், கையில் இருக்கும் ரொக்கம் ரூ.2 லட்சம், வங்கி கணக்கில் ரூ.320 கோடி, விஜயின் மகன், மகள் வங்கி கணக்கில் சுமார் ரூ.4 லட்சம் உள்ளது, மனைவி சங்கீதா வங்கி கணக்கில் ரூ.10.43 கோடி உள்ளது.

விஜயிடம் கடன் பெற்றவர்கள்


தந்தை சந்திரசேகருக்கு ரூ. 3.02 கோடி,
தாய் ஷோபாவுக்கு ரூ. 8.7 கோடி கடன் கொடுத்துள்ளார் விஜய்
மகன் சஞ்சய்க்கு ரூ. 8.78 லட்சம்,
மகள் தீவ்யாவுக்கு ரூ. 4.6 லட்சம்;
மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் கொடுத்துள்ளதாக விஜய் வேட்பு மனுவில் தகவல்
ஆனந்துக்கு 3 கோடி ரூபாய் கடன்

முக்கிய அம்சங்கள்
விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கலின் போது தனது ஆண்டு வருமானம் மற்றும் வரி செலுத்திய விவரங்களையும் அவர் முறையாகச் சமர்ப்பித்துள்ளார். தமிழகத்தின் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அவரது வெளிப்படையான சொத்து அறிவிப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version