தளபதி விஜயின் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் தளபதி விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி வழக்கம் போல் பெரும் பேச்சு பொருளாக வலம் வருகிறது .

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , தளபதி விஜய் , திரிஷா , பிரியா ஆனந்த் , அர்ஜுன் , கவுதம் வாசுதேவ் மேனன் . மேத்தீவ் தாமஸ் , மடோனா , சார்ஜ் மரியான் , மிஸ்கின் உளப்பட படத்தில் பணியாற்றிய ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவிற்கு க்யூட்டான புன்னகையுடன் வழக்கம் போல் கெத்தாக என்ட்ரி கொடுத்த தளபதி விஜய் தனது குட்டி ஸ்டோரியால் அரங்கை அதிர வைத்துள்ளார். லியோ படம் குறித்தும் படத்தில் நடித்ததை குறித்தும் பேசிய அவர் ரசிகர்கள் மற்றும் படத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த சக நடிகர்கள் குறித்தும் அழகாக பேசினார் .

இதையடுத்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஒரு சிறப்பான தரமான குட்டி ஸ்டோரியையும் தளபதி விஜய் சொல்லியுள்ளார் .

ஒரு காட்டுல யானை, புலி, மான், காக்கா, கழுகுன்னு நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருத்தர் ஈட்டியோட போயி யானைக்கு குறி வச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வச்சவர்தான் வெற்றியாளர்.
பாரதியார் சொல்வது போல் பெரிதினும் பெரிது கேள்..பெரிதாக கனவு காணுங்கள் என தெரிவித்தார்.

இதையடுத்து இன்றொரு குட்டி கதையையும் தளபதி சொல்லியுள்ளார் :
ஒரு குட்டிப் பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்டை அவனுக்கு செட்டே ஆகாது. தொள தொளனு இருக்கும். வாட்ச் கையிலயே நிக்காது. அந்த சேர்ல உட்காரலாமா வேணாமா? தகுதி இருக்கா, இல்லயா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை. அப்பா மாறி ஆகணும்னு கனவு. அதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது என தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தளபதி குட்டி கதை சொன்னால் அதில் பல உள் அர்த்தம் இருக்கும் ஆனால் இம்முறை தளபதி சொன்ன குட்டி கதியில் அரசியல் சாயல் ஒட்டிருப்பதாக பலரும் இணையத்தில் அவரவர் கருத்துக்களை கூறி வருகின்றனர். தளபதியின் இந்த குட்டி கதை குறித்து நீங்க என்ன நினைக்குறிங்க உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.