தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற மூத்த நடிகர் கமலஹாசன்.இவர் தமிழ் சினிமாவில் இன்றளவும் தனது அசராத நடிப்பை காண்பித்து வருகிறார் கமல்.இந்த நிலையில் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம் ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் நாளை திரைக்கு வரும் நிலையில் ,உலகின் மிக பெரிய திரை என வர்ணிக்கப்படும் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் டிரெய்லர் வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவேஅறிவித்து இருந்தது. அதன்படி நேற்றிரவு டிரெய்லர் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்களுடன் இணைந்து கமலஹாசனும் டிரெய்லரை பார்த்து ரசித்தார்.
தொடர்ந்து ரசிகர்கள் விக்ரம் ,விக்ரம் என கோஷம் எழுப்ப கமல்ஹாசன் அவர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். மேலும் இப்படம் ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகதினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது