விக்ரம் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான வீர தீர சூரன் திரைப்படத்தின் முழுமையான திரைவிமர்சனம் குறித்து காணலாம்.
அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் , துஷாரா விஜயன் , எஸ்.ஜே.சூர்யா , சுராஜ் வெஞ்சரமுடு, பிருத்வி ராஜ், மாருதி பிரகாஷ் ராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படமே வீர தீர சூரன்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளியான இப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியானது . படத்தின் வெளியீடு சற்று சவால்களை சந்தித்து வெளியான நிலையில் படம் எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக எழும்பியது . இந்நிலையில் இப்படம் வெளியாகி 1 வாரத்தை நெருங்க உள்ள நிலையில் படத்தின் மீதான நீரை குறைகள் குறித்து பார்க்கலாம் .
பழிவாங்கும் ஒன் லைன் கதையை அழகான திரைக்கதை மூலம் கமர்ஷியல் படமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதோடு இந்த கதையை இரண்டு பாகங்களாக தயார் செய்து அதில் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு தனது கிரியேட்டிவ் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.
Also Read : வெம்பக்கோட்டை அகழாய்வில் அஞ்சன கோல் கண்டெடுப்பு..!!
அவருடைய முந்தைய படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை இந்த படத்திலும் உணர முடிகிறது. அதேநேரம் பெரியவருக்கும் எஸ்பி-க்கும் இருக்கும் பழைய பகை குறித்தும், விக்ரமுக்கும் பெரியவருக்கும் உள்ள நெருக்கம் குறித்தும் கொஞ்சம் டீட்டைலாக சொல்லி இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது .
போலீஸ் பவர் மூலம் போலி என்கவுண்டர் செய்ய நினைப்பதும், எஸ்பியை வில்லன் கொல்ல நினைப்பதும் கொஞ்சம் சினிமாத்தனம் நிறைந்ததாக ரசிக்க முடிகிறது . முதல் பாகத்திற்கான லீட் எதுவும் கடைசியில் கொடுக்கப்படாதது சற்று ஏமாற்றம் அளித்தாலும் .
படத்தின் தூண்களாக கருதப்படும் விக்ரம் , துஷாரா , எஸ்.ஜே.சூர்யா , சுராஜ் வெஞ்சரமுடு, பிருத்வி ராஜ் ஆகியோரின் நடை பாராட்டுக்குரியது .
வழக்கமான ரிவெஞ்ச் கதை என்றாலும் அதை முடிந்த அளவு சுவாரஸ்யமாகவும், அதே நேரம் புதுமையாகவும் சொல்லி இருப்பது இயக்குநர் எஸ்யு அருண்குமாரின் திறமையை காட்டுகிறது.