சீயான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் கதை குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி செம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சீயான் விக்ரம் . கமல்ஹாசனுக்கு பின் தமிழ் திரையுலகில் ஏராளமான கெட்டப்புகளை போட்டு நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .
இவரது நடிப்பில் பல திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது இவரது வீர தீர சூரன் திரைப்படத்தின் மீது ஏகபோக எதிர்பார்ப்பு நிரம்பி நிற்கிறது.
அருண் குமார் இயக்கத்தில் தரமாக தயாராகி வரும் இப்படத்தில் விக்ரமுடன் , துஷாரா விஜயன் , எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
Also Read : எஸ்.கேவை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்..!!
இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதை குறித்து இயக்குநர்அருண் குமார் சில சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் . பேட்டி ஒன்றில் பேசியுள்ள இயக்குநர் அருண் குமார் கூறியதாவது :
மதுரை சுற்றுவட்டார பகுதியில் உருவாக்கி உள்ள இப்படம் ஒரு நாள் இரவில் நடக்கும் கதை என அருண் குமார் கூறியுள்ளார் . தமிழ் சினிமாவில் இதுபோன்று ஒரு சில கதைகள் மட்டுமே வந்துள்ள நிலையில் இப்படம் ஒருவேலை “ஓர் இரவு” படத்தின் சாயலாக இருக்குமோ என்று நெட்டிசன்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.
கடந்த 1951 ஆம் ஆண்டு வெளியான ( ஓர் இரவு ) இப்படம் அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்தது.
ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், பி. எஸ். சரோஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படமானது அண்ணாதுரை எழுதிய நாடக ஒரிரவு என்னும் நாடகத்தை அதே பெயரில் படமாக தயாரிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால் நாடகம் வெற்றியடைந்த அளவுக்கு திரைப்படம் வெற்றியடையவில்லை என்பது தான்.
இந்நிலையில் விக்ரமின் இந்த படமும் ஒரு நாள் இரவில் நடக்கும் கதை என இயக்குநர் அருண் கூறியுள்ளதால் இதில் என்னென்ன ட்விஸ்டுகள் இருக்க போகிறது ஒரு நாள் இரவில் அப்படி என்னதான் ஆனது என்பதை பார்க்க நாம் பாடம் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
விக்ரமின் நடிப்பில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்பதை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே…