விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று தொடங்கி வருவிருபாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் பெண்ணிற்கு கத்திக்குத்து.
மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 13 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். .
இந்நிலையில் விக்ரவாண்டியில் உள்ள T.கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டு போட வரிசையில் காத்திருந்த கனிமொழி என்ற பெண்ணை ஒரு நபர் கத்தியால் குத்தியுள்ளார்.
Also Read : பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது
வாக்குச்சாவடியில் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அந்த நபர் பெண்ணின் முன்னாள் கணவர் ஏழுமலை என்பது தெரியவந்துள்ளது .
ஏழுமலை ஏற்கனவே இரட்டை கொலை வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர் என்பதால் அவரை கைது செய்த போலீசார் தற்போது சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து கத்திகுத்துப்பட்ட பெண்ணை மீட்ட போலீசாரை அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.