சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
வார விடுமுறை, முகூர்த்த நாள், விநாயகர் சதூர்த்தி ஆகியவை தொடர்ந்து வருவதை முன்னிட்டு நாளை முதல் 7-ம் தேதி வரை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து 725 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க : இலங்கை அரசின் வாழ்வாதார ஒழிப்பு சதிக்கு மத்திய அரசு உடனே முடிவு கட்ட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!!
சென்னையில் இருந்து திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு 125 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தொடர்ந்து 8-ம் தேதி அன்று விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 120 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 100 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.