பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார் .
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் நேற்று இறுதி போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . இந்த செய்தி ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மேல் முறையீடு செய்த நிலையில், சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என வினேஷ் போகத்கோரியிருந்தார்.
இந்நிலையில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கனவோடு இருந்த தன்னை வெறும் 100 கிராம் எடையை காட்டி தகுதி நீக்கம் செய்ததால் மனமுடைந்த வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .