இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பதக்கமின்றி தாயகம் திரும்பினாலும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும் என ஹரியான மாநில அரசு அறிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் நேற்று இறுதி போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . இந்த செய்தி ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மேல் முறையீடு செய்தார்.
நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என வினேஷ் போகத் கோரியிருந்தார்.
Also Read : தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில் இன்று காலை மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத்துக்கு அனைவரும் ஆறுதல் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பதக்கமின்றி வினேஷ் போகத் தாயகம் திரும்பினாலும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும் என ஹரியான மாநில அரசு அறிவித்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் போலவே வினேஷ் போகத் வரவேற்கப்படுவார்; வெள்ளிப் பதக்கம் வென்றதற்கான மரியாதை, வெகுமதி, வசதிகள் அனைத்தும் அவருக்கு வழங்கப்படும் என ஹரியான முதலமைச்சர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார்.