someswara swamy siva temple : இந்த சிவன் கோவிலுக்கு ஒரு முறை சென்றால், ஆயிரம் சிவலிங்கங்களை தரிசித்த பலனும் புண்ணியமும் கிடைக்குமாம். அது எந்த கோவில்? எங்கு உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள பிரம்மசூத்திரம் அடங்கிய சிவன் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தாலே 1000 சிவலிங்கங்களை தரிசித்த பலனும், புண்ணியமும் கிடைக்கும் என்று கோயில் வரலாறு சொல்லுகிறது.
இந்த கோவில் இந்தியாவில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பொதுவாக, அனைத்து கோயில்களும் கிழக்கு திசை நோக்கி பார்த்து தான் இருக்கும். ஆனால், ஆந்திராவில் இருக்கும் இந்த சோமேஸ்வரசுவாமி கோவில் மேற்கு திசை நோக்கி பார்த்து அமைந்துள்ளது.
இந்த, சோமேஸ்வரசுவாமி கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது மாலை நேரத்தில் சூரிய ஒளியும், இரவில் சந்திரனின் கதிர்களும் விழும்.
பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருக்கும் இந்த அதிசயத்தைக் காண்பதற்காகவே பல நாடுகளில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இவ்வுளவு பெருமை வாய்ந்த இந்த கோவிலுக்கு புராணக் கதைகள் இல்லாமல் இருக்குமா? புராணத்தின்படி, தக்ஷ என்ற மகாராஜாவிற்கு 64 மகள்கள் இருந்தார்களாம்.
அவர்களில் 27 பேரை மட்டும் தக்ஷன் சந்திரனுக்கு திருமணம் செய்து கொடுத்தாராம்.
ஆனால், சந்திரனோ தாரா, ரோகிணி என்ற பெயருடைய இரண்டு மனைவிகளுடன் மட்டுமே வாழ்ந்து வந்ததால், இனி சந்திரனோடு சேர்ந்து வாழப்போவதில்லை என மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்களாம்.
இதனால் கோபம் கொண்ட தக்ஷா உடனே சந்திரனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால், சந்திரனோ அதை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் தன் பேச்சை மதிக்காத சந்திரனுக்குத் தொழுநோய் வரும்படி சாபமிட்டாராம் தக்ஷன்.
சாபத்தை பெற்ற சந்திரன் அதை போக்க பல புண்ணிய நதிகளில் நீராடியும் தொழுநோய் குணமாகவில்லையாம்.
இதனால் மனவேதனையில் இருந்த சந்திரன் இனி தனக்கு தொழு நோய் குணமாகாது என்று எண்ணிக் கவலையில் இருந்தாராம்.
அப்போது, புராண புத்தகம் ஒன்றில் வம்சதாரா நதியில் சில நாட்கள் குளித்தால் தொழுநோய் குணமாகும் என்று எழுதப்பட்டிருப்பதை அறிந்த சந்திரன், அங்கு சென்று வரலாறு கூறியபடியே செய்து தொழுநோயிலிருந்து குணமானார்.
பின்னர், சந்திரன் தனது கரங்களால் மேற்கு திசை நோக்கி இருக்கும் பிரம்மசூத்திரத்துடன் கூடிய சிவலிங்கத்தை அங்கு நிறுவினார் (someswara swamy siva temple).
இதனால் தான் இந்த பிரம்மசூத்திர லிங்கத்தை ஒருமுறை தரிசனம் செய்வது ஆயிரம் சிவலிங்கங்களை தரிசனம் செய்ததற்கான பலனைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகின்றது.
இந்தக் கோயிலுக்கு சென்று சிவ லிங்கத்தை தரிசித்து, சிவனுக்கு அபிஷேகம் செய்தால், உடலில் உள்ள நாள்பட்ட நோய்கள் தீரும் என கோயில் வரலாறு கூறுகின்றது.