Site icon ITamilTv

”அண்ணன் ஓபிஎஸ் தா இனி எல்லாம்” – போட்டுடைத்த முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன்!#AIIMSSmart #aiadmk #gopalakrishnan

Spread the love

அண்ணன் ஓபிஎஸ் யின் அவர் தலைமையில் அதிமுக கட்சி எழுச்சியாகச் செயல்படும் மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்பி கோபாலகிருஷணன் மதுரையில் பேட்டி.

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டது செல்லாது என உறுதியாகி உள்ளது.

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

தீர்ப்பின் பிறகு அண்ணன் ஓபிஎஸ்யின் தலைமையில் அதிமுக கட்சி எழுச்சியாகச் செயல்படும் மதுரையில் ஓபிஎஸ் ஆதரவாளர் முன்னாள் எம்பி கோபாலகிருஷணன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட பதவி செல்லாது என்றும் முன்பிருந்த ஒருங்கிணைப்பாளர் இணை, ஒருங்கிணைப்பாளர் நடைமுறையே தொடரும் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மதுரை முன்னாள் எம்பி கோபாலகிருஷணன் தலைமையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் நிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்

இதனைத் தொடர்ந்து முன்னாள் எம்பி கோபாலகிருஷணன் செய்தியாளர் அவர் கூறும் போது வெளிப்படுத்தும் விதமாகத் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கியும் புரட்சித்தலைவர், தலைவியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம் என்று தெரிவித்தார்.அதிமுக என்பது தொண்டர்களுக்கான இயக்கம் என்பதை இந்த தீர்ப்பின் மூலம் நீதியரசர் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்

நீதியரசர் பெயரிலேயே எங்க கழகத்தின் தலைவர்களின் பெயரும் உள்ளது, ஆகவே இந்தத் தீர்ப்பைப் புரட்சித்தலைவியின் ஆன்மாவும், புரட்சித்தலைவருடைய ஆன்மாவும் இணைந்து கொடுத்த வழிகாட்டுதலாகவே நாங்கள் பார்க்கிறோம்காலம் என்பது அனைத்தையும் மாற்றும், மாற்றம் ஒன்றே மாறாதது, காலம் என்பது எல்லாவற்றையும் சரிப்படுத்தும், காலம் என்பது எல்லாவற்றையும் வழி நடத்தும்.

இந்த தீர்ப்பின் மூலம் கிடைத்த வெற்றியானது அதிமுகவின் ஒன்றைக் கோடி தொண்டனின் வெற்றியாகத் தான் பார்க்க வேண்டும் .மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வெற்றியானது தொண்டர்களின் வெற்றியாக நினைத்து அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடி வருகிறோம்.

 

 


Spread the love
Exit mobile version