விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெற்றிகரமாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது .
நாடு முழுவதும் இன்று 13 இடங்களில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது
மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 13 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர்.
Also Read : எதிர் திசையில் சுழலும் பூமியின் மையப் பகுதி – வெளியான அதிர்ச்சி தகவல்..!!
276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிலினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்கு சாவடி 45 உள்ளதால் அங்கு பணி புரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருந்து வருகின்றனர் . தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள்,தனியார் அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.