அழிவின் விளிம்பில் இருக்கும் பாறு கழுகுகளை பாதுகாக்கும் முயற்சியாக கால்நடைகளுக்கு வழங்கப்படும் Nimesulide வலிநிவாரணி மருந்தின் உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கால்நடை வலிநிவாரணியான Nimesulide என்ற மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது . வலிநிவாரணியான Nimesulide-ஐ உட்கொண்ட கால்நடைகள் இறந்த பிறகு, அவற்றை உண்ணும் ‘பாறு கழுகுகள்’ கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : புத்தாண்டில் இளைஞருக்கு நேர்ந்த சோகம் – சென்னையில் நடந்த பயங்கர சம்பவம்..!!
1990களில் நாட்டில் 5 கோடியாக இருந்த இந்த இன கழுகுகள், தற்போது 300 அளவிலேயே உயிர் வாழ்வதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த அரியவகை கழுகுகள் இனி உயிரிழக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வனத்துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.