சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பயோபிக்கை படமாக்க ஆசை உள்ளது என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி உள்ள திரைப்படமே கேம் சேஞ்சர்
வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் உருவான இப்படத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜன.10) உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிஸியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படம் குறித்து பல சுவாரஸ்ய சம்பவங்களை இயக்குநர் ஷங்கர் பகிர்ந்துள்ளார்.
Also Read : திணறும் மக்கள் – அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ..!!
கொரோனா காலத்தில் இந்தியன் 2,3 ஆகிய கதைகளை வைத்திருந்தேன். மேலும் வேள்பாரி கதையை படித்து, அதற்கு திரைக்கதை எழுதி வைத்திருந்தேன்.
கொரோனா காலத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் கேம் சேஞ்சர் கதையை கூறினார். எனக்கு கில்லி, தூள், தில் போன்ற கமர்ஷியல் படங்கள் பிடிக்கும். அந்த வகையில் கேம் சேஞ்சர் படத்தை மாஸ் மசாலா கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளேன் என தெரிவித்தார் .
தற்போது பயோபிக் எடுக்க எந்த ஐடியாவும் இல்லை, அப்படி எடுத்தால் ரஜினி சாரின் பயோபிக்கை தான் எடுக்க வேண்டும். அவர் ரொம்ப நல்ல மனிதர் என கூறியுள்ளார்.