இஸ்ரேலை ஈரான் எந்த நேரத்திலும் தாக்கலாம் என்பதால் மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை மாதம் 31 தேதி டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் தான் காரணம் எனக் கூறிய ஈரான் . இதற்காக இஸ்ரேலை நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஈரான் நாட்டு அரசு அறிவித்திருந்தது .
Also Read : பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா..!!
இந்நிலையில் இன்றோ இல்லை ஓரிரு நாளிலோ இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதலை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் பல நாடுகளுக்கு கடும் போர் நிலவி வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருவது அப்பாவி மக்களின் கேள்விக்குறியாக்கி உள்ளது.