வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்து கேரள வங்கி உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த மாதம் 30ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள 6 கிராமங்கள் தடம் தெரியாமல் காணாமல் போனது .
சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் வயநாடு மற்றும் அதனை சுற்றி இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 1000 கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தும் பலர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்ப்பட்ட இந்த துயர சம்பவத்தில் 400கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . மேலும் இந்த துயர சம்பவத்தில் உறவுகளை , வீடுகளை இழந்த பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Also Read : புதிய நவீன ருவாண்டாவை கட்டமைப்போம் – பால் ககாமே சூளுரை…!!
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள், மரணமடைந்தவர்கள், வீடுகளை இழந்தோர் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் ஆகியோர் கேரள வங்கியின் சூரல்மாலா கிளையில் பெற்ற கடனை அந்த வங்கி நிர்வாகம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது .
இதுமட்டுமின்றி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கேரளா வங்கி ரூ.50 லட்சம் நிதியுதவியும் வழங்கியுள்ளது.