பூமியில் வளரும் துளசி, வல்லாரை கீரை, பிரண்டை போன்ற பல மூலிகை தாவரங்கள் மருத்துவதிற்காக பயன்படுத்தப்படுகிறது.
இது போன்று மூலிகைகளாக தரையில் வளரும் தாவரங்களைப் போலவே கடல் பாசியும் மருத்துவதத் தேவைக்காகப்
பயன்படுத்தப்படுகிறது.
அசிரோசா போன்ற பாசிகளிலிருந்து ‘அகார் அகார்’ என்னும் பொருள் கிடைக்கிறது. இது ரொட்டி, சீஸ் போன்றவற்றை பதப்படுத்தவும், இறைச்சி, மீன் போன்றவற்றை பதிவு செய்யப்பட்ட உணவாக பாக்கட்டுக்களில் பதப்படுத்தவும் பயன்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க அவை உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கடற்பாசி, கிப்னியா நிடிபிகா என்றும் அழைக்கப்படுகிறது,
இது பல்வேறு வயிற்று நோய்கள் மற்றும் தலைவலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. டர்வில்லியா என்று அழைக்கப்படும் ஒரு கடற்பாசி தோல் சம்மந்தமான நோய்களிக்கு சிகிச்சையளிக்கிறது.
பொதுவாக, கருத்தரிப்பதில் தைராய்டு சுரப்பியின் பங்கு மிகவும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது. தைராய்டு மற்றும் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறவில்லை என்றால் கருத்தரித்தல் நிச்சயமாக தாமதமாகும்.
உணவில், மீன்கள், கடல் கல்லுப்பு ‘அகார் அகார்’ எனும் வெண்ணிறக் கடல் பாசி ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டு சுரப்பியின் வேலையை சீராக்க மிகவும் உதவுகிறது
சில பாசிகள் புற்றுநோய், நீரிழிவு, காசநோய், மூட்டு வலி, இரும்புச்சத்து குறைபாடு, மாதவிடாய் நோய் மற்றும் வெள்ளைப்படுதலைத் தடுக்கின்றது.
கடற்பாசி அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது இந்தியாவில் மாத்திரைகள் தயாரிக்க பயன்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர்.
சில கடற்பாசி குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. குடல் புண்களுக்கு நல்லது. உடளில் உள்ள வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் . இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது.