நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு அவர் மீது போர் தொடுத்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் :
ரஜினி திரையுலக சூப்பர் ஸ்டார்; நான் அரசியல் சூப்பர் ஸ்டார் . ரஜினியிடம் பேசியதை யாருக்கும் நான் சொல்ல வேண்டியதில்லை; அவரும் சொல்ல வேண்டியதில்லை.
நாங்கள் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டதால் சங்கி ஆகிவிட்டோம் என்றால், வருடத்திற்கு இரண்டு முறை அவரை வைத்து படம் எடுத்து கோடி கணக்கில் சம்பாதித்த நீங்கள் யார்.
எனக்கு காவியை போட்டு சங்கியாக்க பார்க்கிறார்கள்; எனக்கு எந்த உடை வேண்டுமானாலும் போடலாம்; ஆனால் காவி Not Fit For Myself…It’s very bad; very ugly; I hate it .
மூவேந்தர்கள் போல பாய்ச்சலில் இருக்கும் புலியை கொடியில் கொண்டவர்கள் நாம். மற்றவர்களை போல ஒட்டகம், நரியை தூக்கிக் கொண்டு வரவில்லை.
200 கோடியை விட்டுவிட்டு வருவது பெரிதென்றால். நாம் 2,000 கோடி பேரம் பேசும்போது வேண்டாம் எனக்கூறிவிட்டு தனித்து போட்டியிடுகிறோம் என சீமான் தெரிவித்துள்ளார்.