வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை வயநாடு மக்களுடன் நாங்கள் இருப்போம் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் தற்போது வரை 250 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வயநாடுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது :
எனது தந்தை இறந்தபோது எவ்வளவு துக்கமடைந்தேனோ, அதே துக்கத்தை வயநாட்டை பார்த்து அடைந்தேன்; இந்திய மக்கள் அனைவரும் வயநாடு மக்களுக்காக துணை நிற்கின்றனர்.
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை இந்த தருணத்தில் வயநாடு மக்களுடன் நாங்கள் இருப்போம்.
நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான பணிகளை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்; மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வோம்
வயநாட்டில் மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது மிகவும் கவலை அளிக்கிறது; இதற்கு விரைவில் ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.