இன்று மற்றும் அடுத்த 2 நாட்களுக்கான வானிலை முன்னறிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
இன்று (ஜன. 29) – தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. வட தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை (ஜன. 30) – தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. காலை வேளையில் பனிமூட்டம் இருக்கும்.
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
நாளை மறுதினம் (ஜன. 31) – தென் தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.